veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

ஒன்ராறியோ | நவம்பர் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது. நேரப்பாவனை மூலம் குறைக்க வழியுண்டு!

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் தனது தேர்தல் வாக்குறுதியாகக் கூறிய 12% மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைபெறப் போவதில்லை என அறிவித்து விட்டார். மாறாக இந்த நவம்பர் 1ம் திகதியிலிருந்து சராசரிக் கட்டணம் 2% த்தால் அதிகரிக்கிறது. இதற்கான அனுமதியை மின்சார வழங்கல் நிறுவனத்துக்கு ஒன்ராறியோ ஆற்றல் சபை (Ontario Energy Board) அனுமதி வழங்கியுள்ளது.

கட்டண தீர்மானம்

ஒன்ராறியோ ஆற்றல் சபை மாகாண அரசின் ஒரு அங்கம். மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றை வழங்கும் தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களைக் கண்காணிப்பது இச் சபையின் கடமை. இச்சபையின் அனுமதி இல்லாமல் இந் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த முடியாது.

மின்சார உற்பத்தியில் ஏற்படும் செலவீன அதிகரிப்பு இருப்பின் கட்டண அதிகரிப்பினால் அதை ஈடுசெய்ய தனியார் நிறுவனங்கள் ஆற்றல் சபையின் அனுமதியை நாட வேண்டும். சபை கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கினால் அம் முடிவுகள் பிரதி வருடமும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடைமுறைக்கு வருகின்றன.

ஒன்ராறியோ அரசாங்கத்தின் கோவிட்காலத்திற்காக, மின்சாரப் பாவனையாளர்களிடம், எந்த நேரப் பாவனை என்றில்லாது, 1 கிலோவாட்மணிக்கு (1kWh) 10.1 சதங்கள் அறவிடப்பட்டது. கடந்த மே மாத விலை நிர்ணயத்தில் இது 12.8 சதமாக அதிகரித்திருந்தது. எதிர்வரும் நவம்பர் மாத விலை நிர்ணயத்தின்போது இது நேரப் பாவனைக்கேற்ற வகையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம்:

பாவனை நேரம்விலை/kWh
மாலை 7:00 முதல் காலை 7:00 வரை (கிழமை நாட்கள், சனி, ஞாயிறு) Off Peak10.5 சதங்கள்
காலை11:00 முதல் மாலை 5:00 வரை – சனி ஞாயிறு தினங்களில் Mid Peak15.0 சதங்கள்
காலை 7:00 முதல் காலை 11:00 வரை, மாலை 5:00 முதல் மாலை 7:00 வரை (கிழமை நாட்கள்) Peak21.7 சதங்கள்
இக் கட்டணங்கள் மாகாண அரசின் கட்டணக் கழிவின் பின்னரானதாகும்

மேற்கண்ட கட்டணங்கள் முற்கூட்டித் தீர்மானிக்கப்பட்டவை. ஆனாலும் பாவனையாளர் விரும்பினால் கட்டண அமைப்பை மாற்றுவதற்கு வழியுண்டு. விருப்பப் படிமுறைக் கட்டணம் (opt-in tiered rates) என்றொரு விருப்பு முறையும் உண்டு. இதன் பிரகாரம் பாவனையாளர் எந்த நேரமென்றில்லாமல் ஒரே கட்டணத்தைத் (flat rate) தேர்வு செய்வது. இதற்கான கட்டணம், முதல் 1000 மணித்தியாலங்களுக்கு 12.6 சதங்கள் / kWh , அதன் பிறகு ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 14.6 சதங்கள் / kWh. வியாபார நிலையங்களுக்கு, முதல் 750 மணித்தியாலங்களுக்குப் பிறகு விலை மாற்றம் நிகழ்கிறது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவர்களுடைய பற்றுச்சீட்டு அனுப்பப்படும் நாளுக்கு (billing cycle / statement date) 10 நாட்களுக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் எந்தத் திட்டத்தில் நீங்கள் பலன் பெறுவீர்கள் எனபதைக் கணிக்க ஒன்ராறியோ ஆற்றல் சபை ஒரு கணிப்புக் கருவியைத் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது. பாவனையாளர் இதில் தமது பற்றுச் சீட்டிலுள்ள தரவுகளை இடுகை செய்தால் எது அவர்களுக்கான சிறந்த திட்டம் என்பதை அது கணித்துச் சொல்கிறது. கருவிக்கான இணைப்புக்கு இத் தொடுப்பை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *