கனடா

கனடாவிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவிற்குள் நுழையும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இங்கிருந்து வெளியேறும் மக்கள் தொகை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறதென கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூன்றாம் காலாண்டறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 73 வருடங்களில் இதுவே அதிக உச்சமான எண்ணிக்கையென அது கூறுகிறது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 74,017 பேர் வெளியேறியுள்ளனர். இதே போன்று அதிகரித்த மக்கள் வெளியேற்றம் 1965, 1967, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, குடியிருப்பு பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காகவும் வேலை வாய்ப்புகள் காரணமாகவும் பெரும்பாலானவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்கிறார்கள்.

இவர்களில் இளைய தலைமுறையினரே அதிகம் குடிபெயர்கிறார்கள் எனவும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமானதாக இருப்பதால் அரசு இதுகுறித்து அதிக அக்கறை கொள்வதில்லை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். (Photo by Jakob Kim on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *