veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Money

கனடா | கோவிட் நிவாரண உதவிப்பணம் பெற்றோரிடம் விளக்கம் கோருகிறது வருமானவரித் திணைக்களம்

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வருமானக் குறைவை எதிர்கொண்ட மக்களுக்கு கனடிய மத்திய அரசினால் வழங்கப்பட்ட ‘அவசரகால நிவாரணத் தொகையான’ $2,000 (நான்கு வாரங்களுக்கு) தொடர்பாக அப்பணம் பெறப்பட்டதை நியாயப்படுத்தும்படி கேட்டு கனடிய வருமானவரித் திணைக்களம் அப்பணத்தைப் பெற்றவர்களுக்குக் கடிதங்களை அனுப்பி வருகின்றது.

வருமானவரித் திணைக்களத்தின் இணையத்தளம் மூலம் இரண்டொரு இலகுவான கேள்விகளுடன் இப்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வழியில் இவ்விண்ணப்பச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. உரிய தயாரிப்புகளின்றி வருமானவரித் திணைக்களத்தினால் அவசரம் அவசரமாக விநியோகிக்கப்பட்ட இப்பணம் தகமையற்றவர்களால் கூட இலகுவாக மோசடை செய்யப்பட்ட விபரம் பின்னர் தெஇய வந்ததும் வருமானவரித் திணைக்களம் தகாத முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அப்பணத்தை மீளப் பெற்று வருகிறது.

இப்பண விநியோகத்திற்கான விண்ணப்பங்களைத் தயாரித்த விடயத்தில் வருமானவரித் திணைக்களம் பல தவறுகளை இழைத்திருக்கிறதென பல சட்ட வல்லுனர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தவறாக இந் நிவாரணத்தைப் பெற்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையில் அவர்களது தகமைகளை நிரூபிக்குமாறும் அது முடியாத பட்சத்தில் அவர்கள பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறும் வருமானவரித் திணைக்களம் கேட்டு வருகிறது. வருட முடிவில் வரிமானவரிக் கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்போது மீள்பணம் ஏதும் அரசாங்கத்தால் கொடுக்குமதியாக இருந்தால் இவற்றில் தவறாகப் பெறப்பட்ட நிவாரணத் தொகையைக் கழித்துக்கொண்டு மீதியைத் திணைக்களம் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வருமானவரித் திணைக்களத்தின் தகவல்களைப் பெற இவ்விணைப்பை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *