Health

கனடா: மத்திய அரசின் பல் மருத்துவ உதவித் திட்டம்

கனடிய பல்மருத்துவத் திட்டம் (Canadian Dental Care Plan (CDCP)) என்ற பெயரில் கனடிய மத்திய அரசு சென்ற வாரம் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. காப்புறுதித் திட்டங்கள் இல்லாத கனடிய மக்கள் தற்போது தமது பல்மருத்துவத்திற்கெனப் பெருந்தொகையான பணத்தைச் செலவிடவேண்டியுள்ளது. இதனால் பலர் தமது பற்களின் ஆரோக்கியத்தைப் பேணமுடியாது தவிர்த்து வருகின்றனர். மத்திய அரசின் இத்திட்டத்தின்படி வருடமொன்றிறிற்கு $90,000 வருமானமில்லாத, காப்புறுதித் திட்டமில்லாத 9 மில்லியன் கனேடியர்கள் பற்சிகிச்சை பெறத் தகுதியானவர்களாக ஆகின்றார்கள்.

மத்திய அரசின் இத்திட்டம் பல படிமுறைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதலில் 87 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2023 இல் கோரப்படும். ஜனவரி 77-86 வயதுடையவர்கள் 2024 ஜனவரியில் விண்ணப்பிக்கலாம். இதனைத் தொடர்ந்து 72-76 வயதுடையவர்கள் பெப்ரவரி 2024 இலும் 70-71 வயதுடையவர்கள் மார்ச் 2024 இலும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பங்குபெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மத்திய அரசு தனித்தனியாக கடிதங்களை அனுப்பும். தகுதிபெறும் விண்ணப்பதாரிகளுக்கு தேவையான விண்ணப்ப உதவிக் குறிப்புகளுடன் ஒரு தொலைபேசி இலக்கமும் அனுப்பப்படும். விண்ணப்பதாரிகள் அத் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து தமது பதிவுகளைச் செய்துகொள்ளலாம். இதன் பின்னர் மே 2024 இல் 65 வயத்துக்கு மேற்பட்டவர்களுக்கான இணையவழி விண்ணப்பம் நடைமுறைக்கு வரும். 18 வயதுக்குக் குறைந்தவர்களும், இயக்கக் குறைபாடுள்ளவர்களுக்கான வரிப்பத்திரமுள்ளவர்களும் ஜூன் 2024 முதல் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள். இதைவிட 10-64 வயதுக்குட்பட்ட, விண்ணப்பிக்கத் தகுதிபெறும் அனைவரும் 2025 முதல் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டு முடிந்ததும் மே 2024 முதல் தகுதிபெறுபவர்கள் பற்சிகிச்சை வைத்தியர்களிடம் சிகிச்சைபெற ஆரம்பிக்கலாம். இதற்கான தகுதி அட்டையை சன் லைஃப் நிறுவனம் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கும்.

பல் சுத்தப்படுத்தல், துலக்குதல், எக்ஸ் றே போன்ற பற் பரிசோதனைகள், பல் துளை நிரப்புதல், கழற்றக்கூடிய பொய்ப் பற்கள், பல்வேர்த்துளைச் சிகிச்சைகள் (root canal treatment) போன்ற சிகிச்சைகள் இத்திட்டத்தில் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *