veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Money

கனடிய மத்திய அரசினால் வழங்கப்படவிருக்கும் பண உதவிகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைச் சமாளிக்க அரசின் திட்டம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திண்டாடும் குடும்பங்களுக்கு உதவி செய்ய கனடிய மத்திய அரசு சில திட்டங்களை அறிவிக்க இருக்கிறது. இவற்றில் சில அடுத்த மாதம் ஒக்டோபர் ஆரம்பத்திலிருந்து வழங்கப்படவுள்ளதென அறியப்படுகிறது. இவற்றை விட மாகாண அரசுகளின் உதவி நலத்திட்டங்களும் சில வழிகளை ஆராய்கின்றனவெனத் தெரிகிறது.

மத்திய அரசின் உதவித் திட்டங்கள்

GST / HST Credit

அடுத்த மாதம் (ஒக்டோபர்) 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் இத்திட்டத்தின்படி வருமானம் குறைவான தனியார் மற்றும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு கால் வருடமும் GST /HST வரி மீள்பணமாக ஒரு தொகை வழங்கப்படும். இது:

  • தனியான ஒருவருக்கு $496
  • திருமணம் முடித்த அல்லது ஒன்றாக குடும்பம் நடத்தும் குடும்பங்களுக்கு $650
  • 19 வயத்துக்குக் குறைந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் $171

எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதற்காக பிரத்தியேகமாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. கடந்த வருடம் வருமான வரிப் பத்திரங்களைச் சமர்ப்பித்திருந்தாலே போதும்.

Canada Child Benefit (CCB)

இக் கொடுப்பனவு ஒக்டோபர் 20ம் திகதியளவில் கிடைக்கும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டவருக்கு இந்த மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும். இயல்புவாழ்வற்ற (dissability) குழந்தைகளுக்கான கொடுப்பனவும் இதில் சேர்க்கப்படும். இக்கொடுப்பனவுக்கு நீங்கள் தகுதிபெற்றுள்ளீர்களா என்பதை அறிய இந்த தொடுப்பினூடு சென்று பாருங்கள்

Canada Workers Benefit (CWB)

இக் கொடுப்பனவு ஒக்டோபர் 12 இல் ஆரம்பிக்கும்.

இது வருமானம் குறைந்த தனியாரோ அல்லது குடும்பமோ மீளப்பெறக்கூடிய ஒரு வரிச்சலுகை (refundable tax credit). இதைப் பெறுவதற்கு நீங்கள்:

  • டிசம்பர் 31 அன்று 19 வயதுக்கு மேற்பட்டவராகவோ அல்லது ஒரு குழதையுடனான பெற்றோராக இருக்க வேண்டும்
  • முதல் வருடத்தில் முழுமையாகக் கனடாவில் இருந்திருக்கும் குடிமகனாக இருக்கவேண்டும்
  • வதியும் மாகாணத்தினால் தீர்மானிக்கப்பட்ட அதி குறைந்த வருமானக் கோட்டிற்குக்கு கீழே உங்களது செலவு தள்ளிய வருமானம் (net income) இருக்க வேண்டும்.
  • தகுதிபெற்ற தனியார் அதிக படச்ம் $1428 டாலர்களையும் குடும்பம் $2,461 டாலர்களையும் பெற முடியும்.

Climate Action Incentive Payment (CAIP)

இக்கொடுப்பனவு ஒக்டோபர் 13 இல் ஆரம்பிக்கும். மத்திய அரசின் சூழல் மாசடைவதைத் தடுக்கும் திட்டத்தின் காரணமாக அதிகரித்த வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அரசு தனியாருக்கும் குடும்பங்களுக்கும் வழங்கும் கொடுப்பனவு இது. இந்த வருடம் இது அல்பேர்ட்டா, சஸ்கச்செவன, மனிற்றோபா,ஒன்ராறியோ, நியூபவுண்ட்லாந்து மற்றும் லப்றடோர், நோவா ஸ்கோஷியா, பிறின்ஸ் எட்வார்ட் தீவு ஆகிய மாகாணங்களிலுள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். ஒவ்வொரு காலாண்டிலும் வழங்கப்படும் இக்கொடுப்பனவு கிராம, சிறு குடியிருப்புகளில் வாழ்பவர்களுக்கு மேலதிகமாகவும் வழங்கப்படும். (Image Credit:Photo by irfan hakim on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *