நகரசபைத் தேர்தல்கள் 2026: வேட்பாளர் சந்திப்பு
ரொறோண்டோ பெரும்பாகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் வேட்பாளருடனான ஊடக சந்திப்பொன்று நேற்று கனடிய தமிழர் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 21 தமிழ் பேசும் வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய சந்திப்பின்போது 9 வேட்பாளர்கள் சமூகமளித்திருந்தனர். கனடிய தமிழர் பேரவையின் செயலாளர் துஷி ஞானப்பிரகாசம் அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்பின் பயனாக நடைபெற்ற இச்சந்திப்பை சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் மார்க்கம் நகரசபை தேர்தல் வேட்பாளருமான வால் புருஷோத்தமன் இச்சந்திப்பை நெறிப்படுத்தினார். ரொறோண்டோவின் முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வேட்பாளர் சந்திப்பில் பங்குபற்றியவர்களின் பட்டியல்:










இச்சந்திப்பின்போது வேபாளர்கள் தம்மை அறிமுகப்படுத்தியதுடன் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
2026 இற்கான ரொறோண்டோ பெரும்பாகத்தின் நகரசபை மற்றும் கல்விச்சபைத் தேர்தல்களில் வேட்பாளர்களாகக் குதித்திருக்கும் தமிழர்களில் கணிசமானவர்கள் இளைய தமிழர்களாகவும் பலதுறைகளிலும் கற்றுத் தேறிய இரண்டாம் தலைமுறைக் கனடியவர்களாகவும் இருப்பதை இச்சந்திப்பின் மூலம் அறியக்கூடியதாகவிருந்தது.
இச்சந்திப்பை ஒழுங்கு செய்த கனடிய தமிழர் பேரவை எந்தவொரு வேபாளரையும் முன்மொழியவோ அங்கீகரிக்கவோ இல்லை என்பதை நெறியாளர் வலியுறுத்தியிருந்ததோடு இவ்வேபாளர் போட்டியிடும் தொகுதிகளில் வாழும் தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இவ்வேபாளர்களுக்கு அளிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.



