கனடா

பியர்சன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் வீழ்ந்து நொருங்கியது!

மினசோட்டா, அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட டெல்ரா எயர்லைன்ஸ் விமானம் – பறப்பு இல. 4819 பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், இன்று (திங்கள்) பி.ப. 4:00 மணியளவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகியது. ‘எண்டவர் எயர்’ என்னும் நிறுவனத்தால் சேவையில் ஈடுபத்தப்பட்டிருந்த இவ்விமானத்தில் 80 பயணிகள் இருந்தார்களெனவும் இவர்களில் எட்டுப்பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தை உட்பட மூவர் ஆபத்தான நிலையில் சிக் கிட்ஸ் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்கமெனவும் அறியப்படுகிறது.

இவ்விபத்தின் காரணமாக பியர்சன் விமானநிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் பீல் பிரதேச பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனரெனவும் கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விமானத்தின் புரண்டு தலைகீழான நிலையில் புகை வெளிவந்துகொண்டிருக்கும் படமொன்றை பி.ப. 2:30 மணியளவில் X சமூகவலைத் தளத்தில் பிரசுரித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *