ரொறோண்டோ ஓட்டல் அறை மாதமொன்றுக்கு $1,500 இற்குக் கிடைக்கிறது
Real Estate News
ஒரு மாத வாடகை $1,500 மட்டுமே, ரொறோண்டோ ஓட்டலில் கிடைக்கிறது!
ரொறோண்டோவில் ஒரு ஓட்டல் ஒன்றை, அப்பார்ட்மெண்ட் வாடகையைவிடக் குறைவான மாதக் கட்டணத்துக்குப் பெற்றுக்கொள்ளலாம்.
நகரிலுள்ள பல தொடர்மாடிக் கட்டிடங்களில் ஒரு படுக்கையறைக் குடியிருப்புகள் சராசரியாக மாதம் $1,800 முதல் $2,000 வரை போகிறது. இதைப் பெறுவதற்கு ஒருவர் ஒரு வருட ஒப்பந்தம் எழுதுவதுடன், அவருடையை வருமானம், நம்பகத்தன்மை (credit report) போன்று பல அத்தாட்சிகளைக் கொடுக்க வேண்டும்.
ரொறோண்டோவில் டொன்வலி ஹொட்டேல் அண்ட் சுயீட்ஸ் (Don Valley Hotel & Suites_ என்னும் ஓட்டலில் ஒரு படுக்கையறையை மாதமொன்றுக்கு $1,500 டாலர்களுக்குப் பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு இவ்வறைகள் முற்றிலும் தளபாடங்களோடு கிடைக்கின்றன.
டொன்வலி பள்ளத்தாக்குக்கு அருகில் இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இவ்வோட்டல் கடந்த 40 வருடங்களாக ரொறோண்டோ வாசிகளின் நீண்டகால, குறுங்கால வாடகைத் தேவைகளைப் பூர்த்திசெய்து வருகிறது. நகர் மையத்துக்கு தொழில் நிமித்தம் செல்லவேண்டியிருப்பவர்களுக்கு வசதியாக அமைந்திருக்கிறது இந்த ஓட்டல்.
இப் பெருந்தொற்றுக் காலத்தில் சுற்றுலாவாசிகளின் வருகை மிகவும் அருகிப் போனமையினால் பல்வேறு ஓட்டல்கள் புதினமான முறைகளில் வருமானமீட்ட முயல்கின்றன. சில ஓட்டல்கள் தமது அறைகளைத் தற்காலிக காரியாலயங்களாக மாற்றி வாடகைக்கு விடுகின்றன.
பெருந்தொற்றுக்கு முதல் குறுங்கால வாடகைக்கென விடப்படும் குடியிருப்புகளின் வாடகை பெருந்தொகையாகவும், முற்பணக் கொடுப்பனவுகளையும் கொண்டிருந்தது. குடும்ப இடர், இயற்கை இடர் போன்ற போன்ற காரணங்களால் அவசரமாக தற்காலிக வீடுகளைத் தேடுபவர்களுக்கு இடம் கிடைப்பதில் சிரமமிருந்தது. இந்த விடயத்தில் டொன்வலி சுயீட்ஸ் செய்வது ஒருவகையில் வியாபாரப் புரட்சி.
டொன்வலி சுயீட்ஸில் அறவிடப்படும் $1,500 டாலருக்கு ஓட்டலில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் கிடைக்கிறது. குளியல் தடாகம், ஸ்பா, விளையாட்டுகள், பொழுதுபோக்கு, வாகனத் தரிப்பு, மலிவு விலையில் சாப்பாடு, இணைய வசதிகள் எனச் சகலமும் கிடைக்கிறது.