கோவிட் பெருந்தொற்று காரணமாகக் கனடாவின் பெரு நகரங்களிலிருந்து புறநகர்களை நோக்கி மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இதில் ரொறோண்டோ முன்னணியில் இருக்கிறது.

கடந்த ஜூலை 2019 முதல் ஜூலை 2020 வரை, ரொறோண்டோவிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 50,375 எனக் கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் புறநகர்ப் பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும் என்பதும், கோவிட் பெருந்த்கொற்றுக் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வசதிகள் வழங்கப்பட்டமையாலும் என நம்பப்படுகிறது.

ரொறோண்டோவிற்கு குடிபுகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் ஒப்பீட்டளவில் வெளியேறுபவர்களது எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சனத்தொகைப் பரம்பல் காரணமாக பெருகிவரும் புறநகர்களாக ஓஷவா (+2.1%), மில்டன் (+4.0%), பிராம்டன் (+3.4%) ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாகக் கனடாவுக்குக் குடிபுகுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுவாகக் கனடாவின் சனத்தொகை அதிகரிப்பின் 90.3% வெளிநாடுகளிலிருந்து வருபவர்களாலேயே நிகழ்கிறது.

  • Post category:Real Estate

Leave a Reply