ரொறோண்டோ பெரும்பாகத்தில் வீடு விற்பனை சரிவு
கேட்கும் விலைக்கு குறைவாகவே விற்கப்படுகிறது
வருட ஆரம்பத்தில் போட்டி போட்டுக்கொண்டு கேடும் விலையை விட அதிகமாகக் கொடுத்து வீடுகளை வாங்கும் நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது எனவும் பெரும்பாலானவை கேட்கும் விலைக்கு குறைவாகவே விற்பனையாகிறது எனவும் வாஹி என்பபடும் நிறுவனம் தெரிவிக்கிரது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரொறோண்டோ பெரும்பாகத்திலுள்ள 245 குடியிருப்பு பகுதிகளில் 70 வீதமானவற்றில் இச்சரிவு ஆரம்பிதத்துவிட்டது என அந்நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
எல்லா வகையான குடியிருப்புகளும் இம்மாற்றத்துக்கு உள்ளாகினாலும் தொடர்மாடிக் குடியிருப்புகளே (கொண்டோமினியம்) அதிக சரிவைக் (80%) கண்டு வருகின்றன. அதே வேளை தனி வீடுகள் (detached), இரட்டை வீடுகள் (semi-detached), தொடர் வீடுகள் (row) மற்றும் கொண்டோ தொடர் வீடுகள் (condo town houses) ஆகியனவற்றின் மீதான போட்டிகள் 60% சரிவைக் கண்டுள்ளன. இருப்பினும் சில குடியிருப்பு பகுதிகளில் இன்னும் போட்டிகள் குறையவில்லை எனப்படுகிறது.
போட்டிகள் தொடரும் பகுதிகள்
போட்டிகள் நிலவும் பகுதிகள் | மேலதிக விலை (Over Bid %) | சராசரி விலை (Median Sold Price) |
---|---|---|
Ajax, Pickering | 15% | $1,450,000 |
Wismer, Markham | 13% | $1,070,100 |
Morningside Heights, Scarborough | 9% | $1,145,000 |
Westbrook, Richmond Hill | 7% | $1,610,000 |
Brownridge, Vaughan | 7% | $1,400,000 |
போட்டிகள் தவிர்க்கப்படும் பகுதிகள் | குறைக்கப்படும் விலை (Under Bid %) | சராசரி விலை (Median Sold Price) |
---|---|---|
Trafalgar, Milton | -10% | $2,100,000 |
Eastlake, Oakville | -7% | $2,540,000 |
Mineola, Mississauga | -7% | $2,162,944 |
Catchet, Markham | -5% | $1,900,000 |
York Mills, North York | -4% | $4,400,000 |
இந்நிலை தொடருமானால் அடுத்த வருட ஆரம்பத்தில் வீடுகளின் விலைகளில் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது என இவ்வாய்வு எதிர்வு கூறுகிறது. கனடிய பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக சுருக்கத்தைக் கண்டுவருவதாலும் இதன் காரணமாக மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாலும் வீட்டுச் சந்தையின் போக்கை திட்டவட்டமாக எதிர்வுகூற முடியாமல் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடிய மத்திய ஆட்சிக்கான தேர்தல்கள் அண்மிக்கும்போது வாக்கு வேட்டைக்காக அரசாங்கம் வாங்குபவர்களுக்கு மேலதிக சலுகைகளை அறிவிக்கும் பட்சத்தில் போட்டிகள் மீளவும் ஆரம்பிக்கவும் சாத்தியமிருக்கிரது.