ரொறோண்டோவில் மலிவான வாடகை வீடுகளின் பற்றாக்குறையைப் போக்க வீட்டுரிமையாளர்கள் சிறிய ‘தோட்ட வீடுகளை’ (garden suites) அமைத்து வாடகைக்கு விடுவதை அனுமதிப்பது பற்றி மாநகரசபை ஆலோசனை செய்து வருகிறது.

முற்காலத்தில் “வண்டி விடுகள்” (coach houses), “குட்டி வீடுகள்” (tiny homes), “பேத்தி வீடுகள்”(granny flats) அல்லது நம்ம ஊரில் போல “வேலைக்காரர் வீடுகள்”(servant homes) என அழைக்கப்பட்ட சிறிய வீடுகளைப் பின் தோட்டத்தில் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில் தடையாக இருக்கக்கூடிய உப-விதிகளை இலகுவாக்குவது பற்றி நகரசபை ஆலோசித்து வருகிறது.

கிச்னர், ஒட்டாவா, எட்மன்ரன், கல்கரி, வைட்ஹோர்ஸ், ஹலிஃபாக்ஸ், விக்டோரியா, மேப்பிள் றிட்ஜ், சானிக், விண்ட்சர், பீற்றார்பொறோ உள்ளிட்ட கனடாவின் பல நகரங்களில் இப்படியான ‘தோட்ட வீடுகளை’ அமைப்பதற்கு அந்தந்த நகரசபைகள் அனுமதிகளை வழங்கிவருகின்றன.

இது தொடர்பாக பொது மக்களுடனும் கலந்தாலோசித்து உடன்பாடு ஏற்பட்டால், 2021 நடுப்பகுதியில் தோட்ட வீடுகளை அமைப்பதற்கான வரைமுறைகளை மாநகரசபை அறிவிக்குமெனத் தெரியவருகிறது.

  • Post category:Real Estate
  • Post published:December 3, 2020