$70 மில்லியன் உங்களுடையதாகவிருக்கலாம் – ஸ்காபரோ வாசிகளுக்கோர் நற்செய்தி!
கோரவேண்டிய இறுதித் திகதி ஜூன் 28, 2023
ஒன்ராறியோ லொட்டெறி கோர்ப்பரேஷனால் 2022 இல் விற்கப்பட்டு இதுவரை கோரப்படாது அநியாயமாகப் பெட்டியில் கிடக்கு $70 மில்லியன் லொட்டோ மக்ஸ் சீட்டு உங்களுடையதாகவிருக்கலாம். எதற்கும் இன்னுமொருதடவை தேடிப்பாருங்கள். வெற்றியத் தந்த இலக்கங்கள் 08, 19, 22, 41, 42, 46, 47, and 10.
ஒன்ராறியோ லொட்டரி கோர்ப்பரேஷனின் வரலாற்றிலேயே இவ்வளவு பெருந்தொகையான பணம் கோரப்படாமல் இருப்பது இதுவே முதல் தடவை.
இந்த சீட்டு ஸ்காபரோவில் விற்கப்பட்டிருக்கிறது என்பது மேலும் பலரைச் சித்தப்பிரமைக்குள்ளாக்கும் விடயம். இச்சீட்டு இதுவரை எந்தவொரு இயந்திரத்திலும் பரீட்ச்சித்துப் பார்க்கப்படவில்லை என்பது அதைவிடக் கொடுமை.
உரிய அதிர்ஷ்டசாலி வெட்கத்தைவிட்டு முன்வந்து இப்பரிசைப் பெறாவிட்டால் ஜூன் 28 இற்குப் பின்னர் இது இன்னுமொருவரது வெற்றிககிண்ணத்துள் கலக்கப்பட்டுவிடும்.
இந்த அதிர்ஷ்டச் சீட்டைக் கண்டெடுப்பவர்கள் உடனடியாக 1-800-387-0098 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டுவிட்டு அப்படியே எமக்கும் ஒரு நன்றி சொல்லுங்கள்!
தொலைந்த சீட்டுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு OLG’s Unclaimed Tickets என்ற இணைப்பு மூலம் தொடர்புகொள்ளுங்கள்