veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

800,000 பேரின் இணையத் தொடர்பு நாளை (மார்ச் 13) முதல் மூடப்படும் – வருமானவரித் திணைக்களம்

Mortgage Calculator

Real Estate News

நாளை (சனி 13) முதல் 800,000 பேரது வருமானவரி கணக்கு நுழைவு மறுக்கப்படும்

நாளை சனி (மார்ச் 13) முதல் 800,000 கனடியர்களின் வரிக்கணக்கிற்கான இணையவழித் தொடர்பு துண்டிக்கப்படுமென கனடிய வருமான வரித் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

இணையவழித் தொடர்புக்கான இரகசிய உள்ளீடுகள் (User ID’s and Passwords) களவாடப்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதமாக வருமான வரித் திணைக்களம் பலரது கணக்குகளுக்கான தொடர்புகளைத் துண்டித்து வருகிறது.

இத் திருட்டுக்கு வருமானவரித் திணைக்களம் காரணமல்லவெனவும், மூன்றாம் தரப்பினரால் பலரது கணக்குகளுக்கான உள்ளீட்டு வழிகள் (access) திருடப்பட்டிருக்கலாம் எனவும் இக்காரணத்தினால் தாம் பெப்ரவரி மாதத்திலிருந்தே பலர் தமது கணக்குகளில் நுழைவதற்கான அனுமதியைத் தாம் மறுத்திருந்ததாகவும் வருமானவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்படியாக ஏறத்தாழ 800,000 பேருக்கு நுழைவு மறுக்கப்பட்டுள்ளது.

இப்படி நுழைவு மறுக்கப்பட்டவர்கள் எப்படி அதை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்களை வருமானவரித் திணைக்களம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கும் என அது அறிவித்திருக்கிறது.

சமீபத்தில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் அவருக்குத் தெரியாமல் பல ஆயிரம் டாலர்கள் கோவிட் நிவாரணப் பணமாகப் பெறப்பட்டிருந்தது. இப்படி ஆயிரக்கணக்கானோர் பெயர்களில் பணம் திருடப்பட்டதையடுத்து வருமானவரித் திணைக்களம் இந்நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இந் நடவடிக்கை ஒரு தரத்தோடு முடிந்துவிடாது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமென திணைக்களப் பேச்சாளர் தெரிவித்ததாக ‘குளோபல் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

Add Your Heading Text Here

Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *