Life

AI-yo (ஐயோ))!

இன்று எனது நாள் சரியில்லை.

இன்று எனது வங்கியிடமிருந்து (RBC) ஒரு கடிதம் வந்தது. திறந்து பார்த்தால் அதனுள் ஒரு தற்காலிக வங்கி அட்டையுடன் இணைப்புக் கடிதமும் இருந்தது. பழைய அட்டையில் எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. இவ்வட்டைகளுக்கு expiry date உம் இருப்பதில்லை. அப்படி இருக்கும்போது ஏன் புதிய அட்டை? அதில் ஆச்சரியம் – எனது பெயரும் குழம்பிய நிலையில் இருந்தது. வங்கியில் அதிகம் நிலுவையில் இல்லாவிடினும் யாராவது இருக்கும் சில்லறையையும் வறுவிக்கொள்ளப்போகிறான் என்ற அச்சத்தில் வங்கியின் பொது இலக்கத்தை அழைத்தேன்.

Virtual Assistant என்றொரு மூளையில்லா ஜென்மம் பதிலளித்தது. ஏற்கெனவே boiling point இல் இருந்தவன் அதைத் திட்டி யாராவது customer service representative உடன் பேசவேண்டும் என்று கேட்டேன். VA விடாப்பிடியாக பல கேள்விகள் கேட்டது. வாயில் வந்தவாறெல்லாம் திட்டிவிட்டு யாராவது human உடன் பேசவேண்டும் என்றேன். ஒரு தாமதமுமில்லாமல் உடனே human உக்கு லைனை மாற்றியது.

சுமார் 45 நிமிடங்கள் பொறுமையிழந்து மேசையை உதைந்து கொண்டிருந்தபோது விளம்பரம். வங்கி தனது அடமான வியாபாரம் பற்றி. முழங்கித் தள்ளியது. திரும்பத் திரும்ப அதுவே தான். 45 நிமிடம் கழித்து human வந்தது. விடயத்தைச் சொன்னேன்.

“பழைய card expire பண்ணியிருக்கலாம். அதிலிருக்கும் expiry date ஐ வாசி” என்றது.

“Client card இல் expiry date இல்லை என்பது உனக்குத் தெரியாதா? என்றேன்.

சிறிது நேரம் மெளனம். மிகவும் அதிகமாக வெட்கப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு பெண் human. கொஞ்சம் பொறு என்றுவிட்டு இன்னும் 20 நிமிடங்கள் கழித்து வந்தது.

“நீ கடைசியாக வங்கிக்கு எப்போது போனாய்? ”

“எனக்கு ஞாபகமில்லை”

“ஜூலை 27 நீ போயிருக்கிறாய். அன்று நடந்த transaction இன் போது ஒரு குளறுபடி நடந்திருக்கிறது. அதை வைத்து system trigger (AI?) பண்ணியிருக்கிறது. இதனால் தான் சந்தேகத்தில் வங்கி உனக்குப் புதிய card அனுப்பியிருக்கிறது”

அந்த human இல் இப்போது எனக்கு பரிவு ஏற்பட்டுவிட்டது. ஜூலை 27 இல் நான் வங்கியில் ஒரு draft எடுத்திருந்தேன். அதைவிட நான் எக்குற்றமும் செய்யவில்லை. வழக்கமாகச் சில்லறை வியாபாரம் செய்யும் இவன் ஏன் ‘பெரிய தொகைக்கு’ draft எடுக்கிறான் என்று AI நினைத்திருக்க வேண்டும். பொதுவாக நீளமான பெயர்களைக் கண்டால் வெள்ளைகள் சந்தேகப்படுவது வழக்கம். AI யுமா? AI தன்னுடைய பாட்டுக்கு ‘சந்தேகத்தை உருவாக்கி’ தானே தீர்ப்பையும் எழுதிவிட்டது.

“இப்போ என்ன செய்யலாம்?” நான் human ஐக் கேட்டேன்.

“என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நீ அந்த வங்கிக்கே போய் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்”

“சரி. செய்கிறேன்”

“என் சேவை பற்றி உனக்கு ஈ மெயிலில் ஒரு சேர்வே வரும். அதை மறக்காமல் நிரப்பி அனுப்பு”

“அந்த human பாவம். அது தன் கடமையை செய்திருக்கிறது. ஆனால் system? AI?”

நான் இன்னும் வங்கிக்குப் போகவில்லை. அதற்கு appointment எடுப்பதற்கும் AI யிடம் போகவேண்டுமோ தெரியாது.

Will update.

*****

இன்றைய இரண்டாவது பிரச்சினை Bell Canada வுடன்.

சென்ற மாத bill $102.00. இன்ரெர்நெட்டுக்கு மட்டும். $69 இல் தொடங்கி திருட்டுத் தனமாக ஏறி வந்தது தெரியும். Rogers இதை விட மகா கள்ளன் என்பதால் இதை நான் பொறுத்துக்கொண்டேன். இம்மாத bill $142.00. எந்தவித முன்னறிவித்தலோ அல்லது எச்சரிக்கையோ இல்லாமல் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது. Bill இல் தரப்பட்ட இலக்கத்திற்கு அழைத்தேன். அதன் Virtual Assistant றோயல் வங்கியைவிட மோசம்.

“உன்ர phone number ஐ சொல்”

சொன்னேன்.

“அது invalid”

இது தொலைபேசி பற்றிய விடயமல்ல internet சம்பந்தப்பட்டது. வேண்டுமென்றால் account number ஐ தருகிறேன்”

அந்த AI assistant இற்கு செவிடு. மீண்டும் மீண்டும் phone number ஐத் தரும்படி கேட்டது. ஆத்திரம் மேலிட்டு உச்ச ஸ்தாயியில் குரைத்தேன். கேட்பதாயில்லை சுமார் 30 நிமிடங்கள் எங்கள் சண்டை நீண்டது. இறுதியில் ஒரு flash. ஆகா! RBC virtual assistant இற்கு கத்தும்போது ‘human’ என்ற சொல்லைப் பாவித்த ஞாபகம் வந்தது. “Can I speak with a human?” உச்ச ஸ்தாயியில் கத்தினேன். VA பம்மி விட்டு அதன் human உடன் தொடுத்து விட்டது.

இன்னுமொரு அரை மணித்தியாலம் (நல்ல காலம் விளம்பரமில்லை) music ஓடியபின் human வந்தது.

“உன்ர தொலைபேசி இலக்கம் என்ன?”

“இது இன்ரெர்நெட் பற்றியது” என்றேன்.

“உன்னை அடையாளம் காணவேண்டும்” என்றது. Account number ஐக் கொடுத்தேன்.

“ஓ இது commercial line. அது வேற டிப்பார்ட்மெண்ட். நீ அதற்குத்தான் அழைக்க வேண்டும்”

“Bill இல இருந்த இலக்கத்துக்கு தான் நான் அழைத்தேன்”

“அது எனக்குத் தெரியாது. திரும்பவும் அழைத்து Corporate account க்கு பேச விரும்புவதாகக் கேள்”

மீண்டும் அழைத்தேன். VA யுடன் இன்னுமொரு 15 நிமிட மல்லுக்கட்டலின் பின்னர் இன்னுமொரு human வந்தது. அதுவும் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டது. எனக்கு கோபம் உச்சியைப் பிளந்து வெளியே நின்றது.

“Sorry. நீ நான் தரும் இலக்கத்துக்கு அழை. அவர்கள் இதை சரி செய்வார்கள்”

“திரும்பவும் அந்த stupid VA யுடன் சண்டை பிடிக்க வேண்டுமா?”

“இல்லை. இவ்விலக்கம் நேரே அந்த டிப்பர்ட்மெண்டுக்குப் போகும்”

அழைத்தேன். மீண்டும் VA. ஒரே சொல்லில் ‘human’ உடன் பேசவேண்டும் என்றேன். Connect பண்ணியது. Human line இற்கு வர 40 நிமிடங்கள் எடுத்தது. மீண்டும் தொலைபேசி இலக்கம் நடுவில் நின்றது. உன்னை authenticate பண்ணாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது”

“உன்ர manager உடன் பேச முடியுமா?”

“இல்லை. நீ தான் இந்த account இற்கு சொந்தக்காரன் என்பதை நிரூபித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்”

“பறுவாயில்லை. நான் வேற carrier இற்கு போகிறேன். Account ஐ close பண்ணப்போகிறேன்”

“கொஞ்சம் பொறு. நான் manager உடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன்”

இன்னுமொரு 30 நிமிடம். கடைசியில் human manager லைனில் வந்தது. மிகவும் இனிக்கப் பேசியது. உன்ர account balance zero என்றால் நான் ஏதும் செய்யலாம் என்றது. ஆகஸ்ட் 14 மட்டும் bill payment இற்கு எனக்கு கால அவகாசம் இருக்கிறது”

“இப்ப நீ அந்தக் காசை கட்டினால் நான் உன்னோட உண்மையைக் கதைக்க எனக்கு அனுமதி கிடைக்கும். வேண்டுமென்றால் உன்ர credit card மூலம் balance ஐக் கட்டலாம். ரெடி என்றவுடன் உன்ர கிறெடிட் கார்ட்டின் இலக்கத்தை phone இல் enter பண்ணு”

Enter பண்ணினேன். மீண்டும் VA. இலக்கத்தை மீண்டும் வாசித்தது. சில இலக்கங்கள் இரண்டு மூன்று தடவைகள் தவறாக வாசிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் enter பண்ணினேன். ஊஹூம். AI வசப்பட்ட system மீண்டும் மீண்டும் சதி செய்தது. Human உடன் மீண்டும் பேசினேன். Situation அதற்குப் புரிந்திருந்தாலும் தவறை அது ஒத்துக்கொள்வதாயில்லை. System AI வசப்பட்டுவிட்டது. அந்த human இன் வேலையும் இன்றோ நாளையோ போகலாம். வேறு வழியே இல்லை. Rogers ஐ நினைக்க வயிறு கலக்கியது. பேசாமல் வங்கிக்கணக்கு மூலம் balance ஐக் கட்டிவிட்டு Bell இன் கால்களில் அம்போ என்று வீழ்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

மொத்தமாக சுமார் 5 மணித்தியாலங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் தின்றுவிட்டன. This is just the beginning என்று அசரீரி சொன்னது. நிறுவனங்களின் இலாப வீக்கம் அதிகரிக்க, CEO க்களின் போனஸ் அதிகரிக்க unemployment லைன்களின் நீளம் அதிகரிக்க என்போன்றோர்களுக்கு கோபத்தால் நாடி நாளங்கள் வெடித்துப்போக, இது AI யுகம். அது வைத்தது தான் சட்டம்.

*****

சரி. இவை என் கதைகள். சமீபத்தில் நான் கேள்விப்பட்ட பிறரது AI கதைகளுமுண்டு. அதிலொன்று:

கடந்த காலாண்டு காலமாக கனடாவில் வாழும் ஒருவர் வீடு வாங்கி விற்று நிறைய இலாபம் சம்பாதித்தவர். சமீபத்தில் வங்கியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவரது வீட்டின் மீதிருக்கும் அடமானக் கடனை மீளச் செலுத்தும்படியும் அவருக்கு இனிமேல் அடமானம் தர தங்களால் முடியாது எனவும் கூறப்பட்டது. ஒழுங்காக மாதக் கட்டுப்பணத்தைக் கட்டிக்கொண்டிருந்தவர்; கவலையுடன் வங்கிக்குச் சென்று தனது அடமானக் கணக்கு பற்றி விசாரித்தார். கதவை இறுகப்பூடிய பின்னர் மனேஜர் மெதுவாகக் கூறினார் “நீ பல வருடங்களின் முன்னர் அடமானம் எடுத்தபோது இதர வங்கிகளுக்குக் கொடுத்த தகவல்களுக்கும் எங்களுக்குத் தந்த தகவல்களுக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது”. அதாவது அடமானம் எடுப்பதற்காக ‘களவாக’ வேலை போட்டு தில்லு முல்லுகளுடன் மோட்கேஜ் ஏஜண்ட் செய்து கொடுத்த அடமான விடயங்களை AI துப்பி விட்டது. முன்னர் தனியொருவரது பிரத்தியேக தகவல்கள் வங்கிகளுக்கிடையே பரிமாறப்படுவதில்லை. இப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் AI எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரே தகவலாகத் துப்பி விடுகிறது. ஒருவரது பெயரையோ அல்லது SIN இலக்கத்தையோ கொடுத்தவுடன் அவரது பூர்வீகத்தையே முன்னால் கொண்டுவந்து கொட்டிவிடும் திறமை AI இற்கு வந்துவிட்டது. சுத்து மாத்துகள் செய்து இனிமேல் வீடு, வியாபாரம் வாங்குவது சிரமமான காரியம் மட்டுமல்ல முன்னாட்களில் செய்த சுத்து மாத்துக்களையும் அது கொண்டுவந்து முன்னால் நிறுத்தப்போகிறது.

அப்போ ஃபிரான்ஸிலிருந்த பஞ்சரத்தினம் சின்னப்பு தலை மாத்தி கனடாவில் பஞ்சர் சின்னாவாக வந்திறங்கி பத்து வீடுகளுக்கு அதிபதியான விடயங்களும் ‘அம்பிடபோகுதோ’ என்று சிலர் கேட்கலாம். Facial recgnition போன்ற விடயங்களை தனி மனித பிரத்தியேகம் கருதி பல நாடுகளும் பல்லாண்டு காலமாக பெட்டியில் பூட்டி வைத்திருந்தன. ட்றம்பர் போன்றோரது ஆட்சியில் இப்பிரத்தியேகங்கள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டால் பெட்டிகளில் பதுங்கியிருக்கும் database கள் எல்லாம் இனி பொதுவெளிக்கு வரலாம். எனவே அவதானம் அவசியம்.

Google ம் Meta வும் அவற்றைப்போன்ற search engine களும் பின்கதவால் திருடிய தரவுகளை வைத்து train பண்ணிய AI ற்கு நேர் வழிகள் தெரியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் அந்தப் பாதை தான். இன்றைய நாள் தந்த தலையிடி போதும். Ai-yo என்று தலையிலடித்துக்கொண்டு fridge ஐத் திறந்தேன். ‘I am real’ என்று முழித்தது beer.

[Image Credit: Photo by Steve A Johnson on Unsplash]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *