அடமானம்

முதற் தடவையாக வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தம் – CMHC

முதற் தடவையாக வீடுகளை வாங்குபவர்களுக்கு கனடா அடமானம் மற்றும் வீடு கூட்டுத்தாபனத்தினால் ( Canada Mortgage and Housing Corp) இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த சலுகையை நிறுத்த அந்நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. ஏற்கெனவே வீடுகளை வாங்கி இதுவரை உடமை மாற்றம் (closing) செய்யாதவர்கள் மார்ச் 21 இற்கு முன்னர் இதற்கான விண்ணப்பத்தைச் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

முதற் தடவையாக வீடுகளை வாங்குபவர்களின் அடமானச் சுமையைக் குறைப்பதற்காகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என CMHC அறிவித்திருக்கிறது. இச்சலுகைக்குப் பதிலாக குறைந்த கட்டுக்காசுடன் அடமானக் கடன்களைப் பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஒரு மாற்றுத் திட்டத்தைப் பரிந்துரைக்கின்றது. இதன் பிரகாரம், அடமானத்தின் 10% வரை பண உதவிகளை வழங்கிவிட்டு வீட்டின் உரிமையில் அதற்கு இணையான பங்கை (partial ownership of the property) அது எடுத்துக்கொள்ளும். இதனால் வாங்குபவரின் மாதாந்த அடமானக் கட்டுப்பணம் குறைவாகிவிடும். 25 வருடங்கள் முடியும்போதோ அல்லது வாங்குபவர் அவ்வீட்டை விற்கும்போதோ அரசாங்கத்தின் முதலீட்டுக்குத் தகுந்தபடி கிடைக்கும் இலாபத்தில் தனது பங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்டுவிடும். கடன் பெற்றவர் பெற்ற கடன் தொகையுடன் கூடவே கடனைப் பெற்ற நாளிலிருந்து வருடம் 8% என்ற கணக்கில் (கூட்டு வட்டியல்ல) முதலீட்டின் ஒரு பங்கையும் அரசாங்கத்திற்குத் திருப்பிக்கொடுக்க வேண்டும். வீடு நட்டத்தில் விற்கப்பட்டால் கடன் பெற்ற நாளிலிருந்து அத்தொகையின் வருடத்துக்கு 8% த்தைக் கழித்துக்கொண்டு மீதியைக் கொடுக்க வேண்டும். மேலதிக தகவலைப் பெற விரும்புவோர் FTHBIOps@cmhc-schl.gc.ca என்ற மின்னஞ்சலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் பிரகாரம் பலந்களைப் பெறுவதற்கான தகமைகள் பின்வருமாறு:

  • புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வாங்குபவர்கள் வீட்டு விலையின் 5% முதல் 10% வீதம் வரை அரசாங்கத்திடமிருந்து கட்டுக்காசைப் (down payment) பெறலாம்
  • ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை ( existing home) இன்னொருவரிடமிருந்து வாங்கும்போது விலையின் 5% த்தை அரசாங்கத்திடமிருந்து பெறலாம்
  • அசையும் (mobile / manufatured home) வீடுகள் – அவை புதியனவாகவோ அல்லது முன்னுடமையாக (pre-owned) இருந்தாலோ – அதன் விலையின் 5% த்தை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும்
  • இப்பணத்தை மீளச்செலுத்துவதற்கான கால எல்லை 25 வருடங்கள். அதற்கு முன்னர் வீடு விற்கப்பட்டால் அப்போதும் மேற்குறிப்பிட்ட வகையில் இலாப /நட்டங்களுக்கேற்ற வகையில் மீளச் செலுத்திக்கொள்ளலாம். வீட்டை வாங்கியவர் இப்பணத்தை விரும்பிய நேரத்தில் தண்டம் எதுவுமின்றிச் செலுத்திக்கொள்ளவும் முடியும். உதாரணத்திற்கு வீடு வாங்கி அடுத்த வருடமே கையில் பணம் மீதி இருந்தால் முழுப்பணத்தையும் செலுத்திவிடமுடியும்

வீடுகளை வாங்குபவர்கள் போதுமான கட்டுக்காசு இல்லாதபோது அரசாங்கத்தின் இவ்வுதவியைப் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு இவ்விணைப்பை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *