அடமானம்

2026 வரை அடமானக்கடன்களைப் புதுப்பிக்க வேண்டாம் – கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அடமான வட்டி மிகவும் குறைவாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அடமானக்கடன்கள் பல 2026 வரையில் புதுப்பிக்கப்படவேண்டி ஏற்படலாம் எனவும் இக்காலத்தில் வட்டி வீதம் ஏற்கெனவே அதிகரித்த நிலையில் இருக்குமென்பதால் மாதாந்த கட்டுப்பணத்தில் பாரிய மாற்றமிருக்க வாய்ப்புண்டு எனவும் கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிதி நிறுவனங்களின் அத்தியட்சகர் அலுவலகம் கடந்த புதனன்று விடுத்த அறிக்கையில் 76% மான அடமானக் கடன்கள் 2016 வரையில் புதுப்பிக்க வேண்டி ஏற்படுமெனவும் இவர்களில் மாறும் வட்டி வீதத்தில் வைத்திருக்கும் 15% மானோர் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகலாமெனவும் எச்சரித்துள்ளது.

“கட்டுப்பண அதிகரிப்பு காரணமாக அடமானக் கடன்களை வைத்திருக்கும் பலர் கடநை அடைக்க முடியாது திண்டாடவோ அல்லது முற்றாக வெளியேறவோ சந்தர்ப்பங்களுண்டு” என அத்தியட்சகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து மத்திய வங்கி இதர வங்கிகளுக்கு வழங்கும் முதன்மைக் கடநன் வட்டி 5% மாக இருக்கிறது. இந்நிலைமை கடந்த 20 வருடங்களாக இருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *